ரஜினியை பின்னுக்கு தள்ளிய அஜித்: 27 வருடங்களுக்கு பின் நடந்த சம்பவம்

பேட்ட- விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியாகி இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இருப்பினும் பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் சில இடங்களில் கொஞ்சம் கூடுதலாகவே வசூல் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு பாக்ஸ் ஆஃபிஸில் முதல் நாள் வசூல் விவரத்தில் 2வது நிலையில் ரஜினியின் பேட்ட படம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித்தின் விஸ்வாசம் முதல் இடத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில் ரஜினியின் படம் 2 வது இடத்தைப் பிடித்திருப்பது என்பது 27 வருடங்களுக்கு பிறகு நடக்கும் விடயம் என்றே தெரிவிக்கப்படுகிறது.

1992 அக்டோபர் 25 இல் ரஜினியின் பாண்டியன் படமும், கமல்ஹாசனின் தேவர் மகன் படமும் களத்தில் இறங்கின.

இதில் ரஜினி படம் தமிழ்நாட்டில் முதல் நாள் வசூலில் இரண்டாம் இடத்தில் இருந்தது எனத் தெரிகிறது.