ரயிலில் பயணித்த ஐந்து தமிழர்கள் திடீர் மரணம்! அதிர்ச்சியில மக்கள்

ரயிலில் பயணித்த ஐந்து தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா – உத்தரப்பிரதேசத்தினூடாகச் சென்ற ரயிலில் பயணித்த ஐந்து தமிழர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்நாட்டிலிருந்து வட இந்தியப் பகுதிக்கு சுற்றுலா சென்ற தமிழர்களே, இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அந்தப் பகுதியில் நிலவிய கடும் வெப்பமே இவர்களின் உயிரிழப்பிற்கு காரணமென கூறப்படுகின்றது.

இந்த ஐந்து பயணிகளும் உயிரிழந்த போது, குறித்த ரயில் வண்டி, ஆக்ராவிலிருந்து தென்னிந்தியா நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்ததாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் போது, குறித்த 5 பேருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஒரு மணித்தியால இடைவெளியில், அவர்களில் நான்கு பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆவது பயணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.