ரஷ்யாவுக்குத் தடை!

தென்கொரியாவில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க, ரஷ்யாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குளிர்கால ஒலிம்பிக் போட்டி எதிர்வரும் ஆண்டு இடம்பெறவுள்ளது.

முந்தைய ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யா ஊக்க மருந்து தொடர்பான விதிமுறைகளை மீறியமை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ரஷ்யாவைத் தடைசெய்யும் முடிவு எடுக்கப்பட்டது என அனைத்துலக ஒலிம்பிக் குழுவின் தலைவர் Thomas Bach தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் சில நிபந்தனைகளின் அடிப்படையில், சில ரஷ்ய விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

அனைத்துலக ஒலிம்பிக் குழுவின் இந்த முடிவினை அவுஸ்திரேலிய ஒலிம்பிக் குழு வரவேற்றுள்ளது.