ராட்சத பல்லியை கொன்று செய்யப்பட்ட பிரம்மாண்ட சமையல் (வைரல் வீடியோ)

சீனாவின் பிரபல சமையல் கலைஞர் வாங் காங் (வயது 29) தனது சமையல் நிகழ்ச்சியின் போது அரிய வகை (Salamander) பல்லியை கத்தியால் வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கி தனது யூடியூப் சேனலின் மூலம் சமையல் கலையினை தனது ரசிகர்களுக்கு பயிற்றுவித்து வருகின்றார்.

அந்த வகையில் அடிக்கடி புதவித உணவு வகைகளை அடிக்கடி ஆன்லைனில் சமைத்து காண்பிப்பதை வாங் காங் வழக்கமாக கொண்டுவந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தனது புதவித சமையலுக்காக அரிய வகை (Salamander) பல்லியை கொன்று அதனை குழம்பாக சமைத்துள்ளார்.

சுமார் 4 நிமிடம் பதிவாகியுள்ள இந்த வீடியோவில் சமையல் செய்யும் முன்னதாக இந்த Salamander பல்லியை கத்தியால் வெட்டி கொன்றுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, அவரது ரசிகர்கள் வாங் காங்-கை கடுமையாக சாடியுள்ளனர்.

சிலர் அரிய வகை பல்லியை அனைவரது கண்பார்வைக்கு முன் கொன்றது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வாங் காங் மன்னிப்புக் கோரும் விதமாக, தான் சமைத்த பல்லி சமையலுக்காக வளர்க்கப்பட்டது எனவும், காட்டில் இருந்து பிடிப்பட்டது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வீடியோவில் தான் கொலை செய்த பல்லி, கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தால் காண்பிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.