ரைசாவுடன் இணைந்தது ஏன்: மனம்திறந்த ஹரிஷ்

இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `பியார் பிரேமா காதல்’

படம் பற்றி ஹரிஷ் கல்யாண் பேசுகையில்;

பிக்பாஸ் முடித்து வெளியே வந்த பிறகு நானும், ரைசாவும் ஒரு செல்ஃபி எடுத்தோம். அந்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகியது.

எங்கள் இருவரையும் சேர்ந்து `ஹரைசா’ என்று ட்ரெண்டாக்கினர். அதுபற்றி நாங்கள் பேசினோம்.

அப்போது தான் ரசிகர்கள் எங்களை திரையில் சேர்ந்து பார்க்க விரும்புகின்றனர் என்பது புரிந்தது. அதுதான் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க காரணம் எனக் கூறினார்.

பியார் பிரேமா காதல் படத்தின் தலைப்புக்கு சிம்பு தான் காரணம். அவரது வரிகள் என்பதால், அவரிடம் படத்தின் தலைப்பு வேண்டும் என்று கேட்டேன்.

அவர், என்னிடம் இருந்து என் சம்பந்தமாக உனக்கு ஏதாவது உதவும்படியாக இருந்தால், எனக்கு சந்தோஷம் தான் என்றார். சிம்பு தான் என் தலைவர் என்று கூறினார்.