ரோகித் சர்மாவின் சாதனையை தகர்த்தெறிந்த பள்ளி சிறுவன்

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் ஒரு போட்டியில் அடிக்கப்பட்ட தனி நபர் அதிகபட்ச ரன்கள் 264 தான். இந்த சாதனை இன்றளவும் முறியடிக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், இளம் வீரர்களை கண்டறியும் முயற்சியாக மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் பள்ளிகளுக்கு இடையிலான போட்டி மும்பையில் நடத்தப்பட்டது.

14 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்த போட்டியில் ஒன்றில் ரிஸ்வி ஸ்ப்ரிங்ஃபீல்ட் அணிக்காக களமிறங்கிய அபினவ் சிங் என்ற சிறுவன், தனி நபராக 265 ரன்களை விளாசியுள்ளான்.

ரோகித் சர்மாவின் உலக சாதனையை முறியடித்த அபினவ் சிங்கின் புகைப்படத்தை மும்பை இந்தியன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், ரோகித் சர்மா, உங்களை விட 264 ரன்களில் அடிப்பதில் சிறந்த வீரர் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.