ரோபோ ஷங்கரின் புதிய அவதாரம் (படம்)

நடிகர் போஸ் வெங்கட் புதுமுகங்களை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

அதில் ஆட்டோ டிரைவர்களின் அன்றாட சோதனைகள் மற்றும் சவால்களை பற்றிப் பேசும் ஒரு பாடல் படத்தில் இருக்கிறது.

இந்த பாடலை நடிகர் ரோபோ ஷங்கர் பாடியிருக்கிறார்.

இது குறித்து நடிகர் மற்றும் இயக்குனரான போஸ் வெங்கட் கூறும்போது,

“நான் ஆரம்பித்த இடத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்தேன்.

நான் ஒரு ஆட்டோ டிரைவராக என் தொழிலை தொடங்கினேன். அதற்கு மரியாதை செய்ய விரும்பினேன்.

பாடல் பற்றிய கருத்தாக்கம் உருவான போதே, அதை ராகம் மற்றும் ஸ்ருதி பற்றி தெரியாத யாரோ ஒருவர் தான் அதை பாட வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம்.

சாதாரண ஒரு தொழிலாளி பாடுவதை போல பாடல் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்பினோம். பாடலை பாட நல்ல பிரபலமான ஒரு குரலை தேடினோம். ரோபோ ஷங்கர் குரல் அதற்கு பொருத்தமாக இருந்தது.

பாடலின் இறுதி வடிவம் எப்படி இருக்க வேண்டும் என எனக்கு சில யோசனைகள் மற்றும் அனுமானங்கள் இருந்தபோதிலும், இசையமைப்பாளர் ஹரி சாய், அவர் பங்குக்கு சில துள்ளலான விஷயங்களை சேர்த்துக் கொண்டார் என்று கூறினார்.