லட்ச கணக்கில் சம்பளம் பெறும் ஐ.பி.எல் ‘சியர்ஸ் கேர்ள்ஸ்’! விபரம் வெளியானது

ஐ.பி.எல் தொடரில் சியர்ஸ் கேர்ள்ஸ் போடும் ஆட்டத்திற்கான சம்பள விபரம் வெளியாகியுள்ளது.

ஒரு போட்டிக்கு ஆட்டம் போட ஒவ்வொருவருக்கும் ரூ.6,000 முதல் 12,000 சம்பளம் வழங்கப்படுகின்றது.

இதில் தங்களுடைய அணி வெற்றி பெற்றால் கூடுதல் போனஸ் வேறு கிடைக்கும். இந்த சம்பளம் போட்டி நடைபெறும் நான்கு மணி நேரத்துக்கு மட்டுமே.

அதுமட்டுமின்றி வெற்றி பெற்ற அணி நடத்தும் வெற்றிவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் சியர்ஸ் கேர்ள்ஸ்களுக்கு கூடுதலாக ரூ.12,000 போனஸ் வழங்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி போட்டோஷூட்டில் கலந்து கொண்டால் அதற்கு தனி சம்பளம். 8 அணிகள் உள்ளது.

இந்த நிலையில், ஒவ்வொரு அணியை சேர்ந்த சியர்ஸ் பெண்களுக்கு அந்த அணிக்கு ஏற்றவாறு சம்பளம் வழங்கப்படுகிறது.

டெல்லி டேர்டெவில்ஸ்

வெள்ளை நிற ஆடையில் துள்ளும் இப்பெண்கள், ஒரு போட்டிக்கு மட்டும் ரூ.9,700 சம்பளம் வாங்குகிறார்கள். ஒரு வருடத்திற்கு 2.5 லட்சம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

மஞ்சள் நிற ஆடையுடன் தோன்றும் இப்பெண்கள் ஒவ்வொரு போட்டிக்கும், ரூ.10,000 சம்பளம் வாங்குகிறார்கள். ஒரு வடத்திற்கு 2.6 லட்சம்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி

வெள்ள நிற ஆடை அணிந்திருக்கும் இப்பெண்கள், ஒரு போட்டிக்கு 9,500 சம்பளம் வாங்குகிறார்கள். ஒரு ஆண்டுக்கு 2.5 லட்சம் ஆகும்.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி

நீல நிற ஆடை அணிந்திருக்கும் இப்பெண்கள், 12,000 சம்பளம் வாங்குகிறார்கள். ஒரு வருடத்திற்கு 3.22 லட்சம் ஆகும்.

மும்பை இந்தியன்ஸ் அணி

ஒரு போட்டிக்கு 16,000 சம்பளம் வாங்கும் இவர்கள், இந்த அணி வெற்றி பெற்றால், 6,500 போனஸ் வழங்கப்படுகிறது. இவர்களது ஆண்டு வருமானம் 8 லட்சம் ஆகும்.

ரோயல் சேலஞ்சர்ஸ் அணி

ஒரு போட்டிக்கு 6,500 சம்பளம் வாங்கும், இவர்களது ஆண்டு வருமானம் 5 லட்சம் ஆகும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

ஒரு போட்டிக்கு 20,000 சம்பளம் வாங்கும் இவர்கள், இந்த அணி வெற்றி பெற்றால், 6,500 போனஸ் வழங்கப்படுகிறது. இவர்களது ஆண்டு வருமானம் 11 லட்சம் ஆகும்.