லண்டன் அருங்காட்சியகத்தில் தமிழனுக்கு கிடைத்த மிகப் பெரிய கெளரவம்!

தென்னிந்திய சினிமாவில் மட்டுமே பிரபலமாக இருந்த நடிகர் சத்யராஜ், ராஜமௌலியின் பாகுபலி படத்தில் கட்டப்பாவாக நடித்த பிறகு உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார்.

அவரை கௌரவிக்கும் விதமாக லண்டனில் உள்ள மெழுகு சிலை மியூசியத்தில் சிலை வைக்கப்பட உள்ளது.

Madame Tussaudsஇல் ஏற்கனவே பாகுபலியாக நடித்த பிரபாஸுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மொழியில் நடிகராக அறிமுகமாகி இந்திய அளவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சத்யராஜ்.

சத்யராஜின் நடிப்பை பார்த்து பல திரைபிரபலங்களும் வியந்து பாராட்டினார். இதனையடுத்து பல படங்களிலும் ஒப்பந்தமாகி மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் சத்யராஜ்.

லண்டனில் துஸ்ஸாத் என்ற அருங்காட்சியகத்தில் நடிகர் சத்யராஜிற்கு மெழுகுசிலை அமைக்க உள்ளனர்.

இந்த அருங்காட்சியகத்தில் ஒரு தமிழருக்கு வைக்கப்படும் முதல் மெழுகுசிலை இதுவாகும்.

இதற்கு முன்னதாக நடிகர்கள் அமிதாப் பச்சன், சல்மான்கான், பிரதமர் மோடி ஆகியோருக்கு வைக்கப்பட்டுள்ளது.