லாராவின் சாதனையை நெருங்கும் கிறிஸ் கெய்ல்!

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாராவின் சாதனையை, அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல் நெருங்கி வருகின்றார்.

விண்டிஸ் ஒருநாள் அணி சார்பில், அதிக ஓட்டங்களை குவித்த வீரராக ஜாம்பவான் லாரா, 10348 ஓட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

கிறிஸ் கெய்ல் 288 போட்டிகளில் விளையாடி 10074 ஓட்டங்களை குவித்து 2வது இடத்தில் உள்ளார்.

எதிர்வரும் உலகக்கிண்ண தொடருடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ள கிறிஸ் கெய்ல், உலகக்கிண்ண தொடரில் விண்டிஸ் அணிக்கு 9 லீக் போட்டிகள் உள்ளநிலையில், இச்சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.