லேடி சூப்பர் ஸ்டாரின் இடத்திற்கு ஆபத்து! குறிவைத்த நடிகை

லேடி சூப்பர் ஸ்டாரின் இடத்தை 2018 ஆம் ஆண்டு அதிக படங்களில் நடித்துள்ள புகழை தன் பெயரில் வைத்துள்ள அந்த நடிகை குறிவைக்கிறாராம்.

2018 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடித்தவர்கள் என்ற பெருமையை 3 கதாநாயகிகள் பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு அதிக படங்களில் கதாநாயகியாக நடித்ததோடு மட்டுமல்லாமல் அதிக வெற்றி படங்களை கொடுத்ததும் அந்த புகழை தன் பெயரில் வைத்துள்ள நடிகை தான்.

கடந்த சில ஆண்டுகளாக இந்த பெருமைகளை கைவசம் வைத்து இருந்த லேடி சூப்பர் ஸ்டார் இந்த ஆண்டு 2 படங்களில் தான் நடித்துள்ளார். இரண்டுமே அவர் முதன்மை வேடத்தில் நடித்தவை.

இது தொடர்ந்தால் தன்னுடைய முதல் இடத்துக்கு ஆபத்து என்பதை உணர்ந்த லேடி சூப்பர் ஸ்டார் சமீபகாலமாக பெரிய கதாநாயகர் படங்களிலும் நடிக்கத் தொடங்கி உள்ளார்.

இருந்தாலும் லேடி சூப்பர் ஸ்டார் இடத்தை அந்த நடிகை குறிவைத்து விட்டார் என்றே கூறப்படுகிறது.