வங்கக் கடலில் நிலநடுக்க எதிரொலி! சென்னையில் நில அதிர்வு

வங்கக் கடலில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சென்னையில் சில இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வங்கக் கடலில் இன்று காலை 7.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

சென்னைக்கு வடகிழக்கே 609 கிமீ தொலைவில் கடல் மட்டத்தில் இருந்து 10 கிமீ ஆழத்தில் ரிக்டர் அளவு கோலில் 4.9 அலகாக நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.

இந்த நிலநடுக்கம் காரணமாக சென்னையில் கேளம்பாக்கம், சைதாப்பேட்டை, டைடல் பார்க், தி.நகர் போன்ற பல பகுதிகளில் வாழும் மக்கள் நில அதிர்வை உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.

வெறும் 2 முதல் 3 நொடிகள் மட்டுமே இந்த நில அதிர்வை உணர்ந்ததாகவும் பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.