வடக்கின் மாபெரும் சமரில் யாழ். மத்திய கல்லூரி வெற்றி..!!

வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 112வது கிரிக்கெட் போட்டியில் அணி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஒரு விக்கட்டினால் வெற்றி பெற்றது.

யாழ்ப்பாண மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று முந்தினம் ஆரம்பமான இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாண மத்திய கல்லூரி அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி 217 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் செரூபன் அதிகபட்சமான 65 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் மத்திய கல்லூரியின் சார்பில் விஷாஸ் கான் 57 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து தமது முதலாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாண மத்திய கல்லூரி அணி தமது முதல் இன்னிங்ஸில் 328 ஓட்டங்களை பெற்றது.

பின்னர் தமது 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 219 ஓட்டங்களை பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இதனை தொடர்ந்து 109 எனும் இலக்கை நோக்கி துடுப்பாடிய யாழ்ப்பாண மத்திய கல்லூரி அணி 9 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

யாழருவி நிருபர் ஏ.ஸ் நிதர்ஷன்