வடக்கில் தொடர்ச்சியாக உயிர் பறிக்கும் மின்னல்! இன்றும் ஒருவர் பலி

முல்லைதீவில் மின்னல் தாக்கி நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு, விசுவமடு தொட்டியடிப் பகுதியிலே மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது கிளிநொச்சி, தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மைய நாட்களாக வடக்கில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.