வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் வாகனம் பேரணி ஆரம்பம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ள எழுச்சி பேரணிக்கு ஆதரவு கோரி வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் வாகனம் பேரணியொன்று இன்று யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழின அழிப்புற்கு நீதி கோரி எதிர்வரும் 16 ஆம் திகதி மாபெரும் எழுச்சி பேரணியொன்றை யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் முன்னுடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந் நிலையில் இவ் எழுச்சி பேரணி தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஆதரவைத் திரட்டும் நோக்கில் யாழ் பல்கலைக் கழகத்திலிருந்து வாகனப் பவணியொன்றை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆரம்பித்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் வாகனப்பேரணி யாழ்ப்பாணம் முழுவதும் சென்று அதனைத் தொடர்ந்து வவுனியா, கிளிநொச்சி மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழருவி நிருபர் எஸ்.நிதர்ஷன்