வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சித்தார்த்!!

புதுமுக இயக்குனர் சாய் சேகர் இயக்கும் அருவம் படத்தில் சித்தார்த் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கேத்தரீன் தெரசா நடிக்கிறார்.

திகில் படமாக விறுவிறுப்பான கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இந்த படத்திற்காக யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலை பாடியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு ‘நானே சுட்டேன்’ என்ற படத்தில் சித்தார்த் நடிக்க உள்ளதாக சில வதந்திகள் வெளியாகின.

இதே படத்தில் சிம்புவும், சரத்குமாரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர் என்ற வதந்தி காட்டுத்தீ போல பரவியது.

இந்த வதந்திக்கு சித்தார்த் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்த செய்தி எல்லாம் யாரோ வடை சுட்ட மாதிரி இருக்கிறது. ரூம் போட்டு யோசிக்கிறாங்களோ? இதுல நெருங்கிய வட்டம் வேற. நடத்துங்க என்று கூறியுள்ளார்.