வன்முறைகள் கட்டுப்பாட்டுக்குள்! பிரதமர் அறிவிப்பு

இலங்கையில் கடந்த 12 மற்றும் 13ஆம் திகதிகளில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த இன ரீதியான வன்முறைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படையினரின் தீவிர முயற்சியில் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதியில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விசாரணைகளை மேற்கொள்வதற்கென இரு பிரதி பொலிஸ்மா அதிபர்கள் தலைமையில் பொலிஸ் குழுவொன்றை பொலிஸ்மா அதிபர் அனுப்பி வைத்துள்ளார்.