வயதான வேடமிட்டு சபரிமலையில் 35 வயது பெண் செய்த வேலை: வெடித்தது சர்ச்சை

சபரிமலை விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 8 ஆம் திகதி பெண் ஒருவர், வயதானவர்போன்று வேடமிட்டு சாமி தரிசனம் செய்ததாக தனது பேஸ்புக் பக்கத்தில் தகவல் பரப்பியதால் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு வழங்கியது.

இதனைத் தொடர்ந்து சர்ச்சைகள் வெடித்தன.

இந்நிலையில் தற்போது மஞ்சு என்ற 35 வயதான பெண் வயதானவர் போன்று தனது முடியில் வெள்ளை பெயின்ட் அடித்து சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.

இதற்கு கேரளாவில் உள்ள புதுயுகம் என்ற பேஸ்புக் குரூப் உதவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மஞ்சு, 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் செல்ல எதிர்ப்பு இல்லாததால், இது போன்ற வேடம் அணிந்து சென்று முழு பூஜையிலும் கலந்து கொண்டு வந்தேன்

இவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தில் மஞ்சு குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இது குறித்து கேரள அரசு சார்பிலோ பொலிசார் சார்பிலோ எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.