வரதட்சணை கொடுமை: குடும்பப் பெண்ணின் விபரீத முடிவு!

வரதட்சணை கேட்டு கொடுமை செய்தமையால் விரக்தியடைந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் இடம்பெற்றுள்ளது.

சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ் (32) என்பவர் சோழிங்கனல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ரோகிணி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அஸ்மிதா என்ற 2 வயது குழந்தை உள்ளது.

திருமணத்தின் போது பெண் வீட்டார் 50 பவுண் தங்க நகை, வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், இரு சக்கர வாகனம், ஒரு கார், ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

பின்பு ரோகிணிக்கு பெண் குழந்தை பிறந்ததால் சுரேஷ் வீட்டாரைச் சேர்ந்தவர்கள் ரோகிணியை கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதில்லாமல் வரதட்சணை என்ற பெயரால் எடுத்த பிச்சையெல்லாம் பத்தாமல் சுரேஷ் மேலும் 20 லட்சம் மதிப்பிலான புது கார், ரூ.50 லட்சம் ரொக்கம் கேட்டு ரோகிணியை தினமும் அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த குறித்த பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் ரோகிணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் குற்றவாளியை தேடி வருகின்றனர்.