வரலாற்றில் முதல் முறையாக அதிக நேரம் முடங்கியது பேஸ்புக்: இதுவே மிகப்பெரிய செயலிழப்பு

உலகம் முழுவதும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைதளங்கள் புதன்கிழமை இரவில் இருந்து வியாழக்கிழமை காலை வரை முடங்கியுள்ளது.

ஆனால், ஒருசில சமூகவலைதள பயன்பாட்டாகளுக்கு எவ்வித பிரச்சனையும் இன்றி பேஸ்புக் இயங்கியுள்ளது.

இந்த தடங்களுக்கு பேஸ்புக் நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது. பயன்பாட்டாளர்கள் சிலர் தற்போது பேஸ்புக் பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதை அறிகிறோம்.

விரைவில் இதனை சரிசெய்வோம், உங்கள் பொறுமைக்கு நன்றி என பேஸ்புக் தெரிவித்துள்ளது.

இதுபோன்று இன்ஸ்டாகிராமும் மன்னிப்பு கோரியுள்ளது.

பேஸ்புக் அதன் வரலாற்றில் மிகவும் கடுமையான செயலிழப்புக்கு ஆளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பேஸ்புக் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய செயலிழப்பு என கூறப்படுகிறது.

பேஸ்புக் கடந்த காலத்தில் இந்த அளவு ஒரு தடங்கல் இருந்தது 2008 ஆம் ஆண்டில் என்பது குறிப்பிடத்தக்கது.

150 மில்லியன் பயனர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால், அதனை ஒப்பிடும்போது இன்று 2.3 பில்லியன் பயனர்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.