வலுவான இந்தியாவை உருவாக்க அழைப்பு விடுத்த நரேந்திர மோடி!

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ஒன்றிணைந்து வலுவான இந்தியாவை உருவாக்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தேர்தல் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மோடி, இந்தியா மீண்டும் வெற்றிபெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய நாடாளுமன்ற தேர்தலின் தற்போதைய நிலைவரத்தின்படி பா.ஜ.க 538 தொகுதிகளில் 343 க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

அத்துடன் காங்கிரஸ் 500 தொகுதிகளில் 93 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.