வல்லாபியை முழுமையாக விழுங்கிய மலைப்பாம்பு!

அவுஸ்திரேலியாவில் மலைப்பாம்பு ஒன்று கங்காரு வகையைச் சேர்ந்த வல்லாபியை முழுமையாக விழுங்கியுள்ளது.

குயின்ஸ்லாந்து பகுதியில் வீடு ஒன்றின் வெளிப்புறப் பகுதியில் மலைப்பாம்பு இருப்பதைக் கண்ட வீட்டின் உரிமையாளர், பாம்பு பிடிப்பவருக்கு தகவல் கொடுத்தார்.

தகவலின் பேரில் அங்கு வந்த பாம்பு பிடிப்பவர் 13 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பு கங்காரு குடும்பத்தைச் சேர்ந்த வல்லாபி என்ற விலங்கை முழுமையாக விழுங்கியதைப் பார்த்துள்ளார்.

அதன்பிறகு மலைப்பாம்பை பிடித்து அதனை வனப்பகுதியில் விட்டதாக தெரியவந்துள்ளது.