வவுனியாவில் ஒரு மாத குழந்தைக்கு எமனாக மாறிய தாய்பால்!

தாய்பால் புரக்கேறியதில் ஒரு மாத குழந்தை ஒன்று மரணமாகியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இன்று பகல் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பம் ஒன்றின் ஒரு மாதக் குழந்தை பாலுக்கு அழுத நிலையில் தாய் பாலினை ஊட்டியுள்ளார்.

இதன் போது தாய்பால் புரக்கேறியுள்ளது. உடனடியாக குழந்தையை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் முயற்சி பலனின்றி குழந்தை மரணமடைந்துள்ளது.

ரங்கநாதன் ரவீன் என்கின்ற ஒரு மாத ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.