வவுனியாவில் வயல் காவலில் இருந்த இருவரை சராமரியாக வெட்டிவிட்டு தப்பியோடிய மர்ம நபர்கள்

வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் நேற்று இரவு 11.00 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓமந்தை சேமமடு பகுதியில் வயல் காவலிற்காக இருந்த இருவர் மீது அவ்விடத்திற்கு வந்த இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிதறது.

இதனையடுத்து ஓமந்தை பொலிசாருக்கு தகவல் கொடுத்தமையின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார்படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட இருவரையும் காவல்துறை வாகனத்தில் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்தனர்.

கால் மற்றும் கைகளில் வாள் வெட்டு காயங்களுடன் வசந்தகுமார் (வயது 37), கன்னம் மற்றும் கழுத்து பகுதியில் வாள்வெட்டு காயங்களுடன் கருணாகரன் (வயது 33) என்பவரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் திடீர் விபத்து பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலதிக விசாரணைகள் பொலிசாரினால் மேற்கொள்ளப்படுகிறது.