வவுனியா பேருந்து சேவை பிரச்சினைக்குத் தீர்வு காண மூன்று யோசனைகள் அரச அதிபரிடம் முன்வைப்பு

வவுனியாவில் தனியார் பஸ் சேவையாளர்களுக்கும், இலங்கை போக்குவரத்துச் சபையினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் வவுனியா அரசாங்க அதிபருக்கு மூன்று யோசனைகளை முன் வைத்துள்ளார்.

இரு தரப்பினரும் ஒரே இடத்தில் இருந்து சேவையாற்ற முடியாது என்பது தெளிவாகியிருப்பதனால், வவுனியா நகரில் பழைய இடத்தில் இருந்தே இலங்கை போக்குவரத்துச் சபையினரை சேபையில் ஈடுபட அனுமதிப்பதுடன், பொலிஸ் நிலையத்திற்கு எதிரில் உள்ள காணியொன்றில் தனியார் பஸ்களுக்கான நிலையத்தை அமைத்து, புதிதாக யாழ் வீதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலை கட்டிடத் தொகுதியில் வவுனியாவுக்கான பொருளாதார மையத்தைச் செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அவர் அந்த யோசனைகளில் தெரிவித்திருக்கின்றார்.

தமது யோசனைகளை உள்ளடக்கியதாக லிங்கநாதன் வவுனியா அரசாங்க அதிபருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கை போக்குவரத்துச் சபையினர் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதம் தொடர்பிலான பிரச்சினைக்கு நீண்டகால அல்லது நிரந்தர தீரவுக்கான யோசனைகளை இந்தப் பிரச்சினை தொடர்பான சந்திப்பில் தெரிவித்திருந்தேன்.
தங்கது மேலான உரிய உடன் நடவடிக்கைக்காக மீண்டும் அவற்றை எழுத்து மூலமாகத் தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

தற்போது இருக்கின்ற நிலைமைகளின் அடிப்படையில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையினரை ஒரே தளத்தில் இருந்து சேவையில் ஈடுபடுத:துவது என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே காணப்படுகின்றது. எனவே, இலங்கை போக்குவரத்துச் சபையினர் முன்னர் பயனப்டுத்தி வந்த வவுனியா நகரச சபையின் கட்டுப்பாட்டில் உள்ள பழைய பஸ் நிலையத்தினை இலங்கை போக்குவரத்துச் சபையினருக்கு வழங்க வேண்டும்.

இரண்டாவதாக, தனியார் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு வவுனியா நகரச சபையின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் அங்காடி வியாபார நிலையம் காணப்படுகின்ற பகுதியினை வழக்க வேண்டும்.

ஏற்கனவே மதகு வைத்தகுளத்தில் (தேக்கவத்தையில்) 2 ஏக்க் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்ட பொருளதார மத்திய நிலையத்தைத் தற்போது பல மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பேரூந்து நிலையத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, மேற்கூறிய காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி நிரந்தரமான, நிலைத்து நிற்கக்கூடிய ஆக்கபூர்வமான உடனடி முடிவினை மேற்கொள்ளுமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன்.

என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது