வாங்கிவிட்டீர்களா…..?? மலிவு விலையில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள்

கூல்பேட் நிறுவனம் இந்தியாவில் மலிவு விலையில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.

ஆப்லைன் சந்தையில் விற்பனை செய்யப்படும் மூன்று ஸ்மார்ட்போன்கள் கூல்பேட் மெகா 5, மெகா 5எம் மற்றும் மெகா 5சி என அழைக்கப்படுகிறது.

புதிய கூல்பேட் மெகா 5 ஸ்மார்ட்போன் புளு, கோல்டு மற்றும் டார்க் கிரே என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.

இந்தியாவில் இதன் விலை ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூல்பேட் மெகா 5சி ஸ்மார்ட்போனின் விலை ரூ.4,499 என்றும் கூல்பேட் மெகா 5எம் ஸ்மார்ட்போனின் விலை ரூ.3,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மூன்று புதிய ஸ்மார்ட்போன்களும் ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.