வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். தளத்தில் புதிய அம்சங்கள்

வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பீட்டா பயனர்களுக்கு புதிய அம்சம் வழங்கப்படுகிறது. புதிய 2.19.10.21 அப்டேட் மூலம் பயனர்களுக்கு பல்வேறு புதிய வசதிகள் கிடைக்கின்றன.

அந்த வகையில் புதிய அம்சங்கள் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம்.

இந்த அப்டேட் மூலம் செயலியில் சில முக்கிய அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு, செயலியின் ஒட்டுமொத்த அனுபவமும் மேம்படுத்தப்படலாம் என தெரிகிறது.

இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது ஜிஃப்களில் ஸ்டிக்கர்களை சேர்க்க முடியும்.

இதில் பயனர்கள் நேரம், இருப்பிடம் மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகளில் கிடைக்கும் தனிப்பட்ட ஸ்டிக்கர்களை பயன்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது.

இதுதவிர குரூப்களில் இருப்பவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பதில் அனுப்ப முடியும்.

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் ஏற்கனவே இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.