வாட்ஸ்அப் க்ரூப்களில் புதிய வசதி!-

வாட்ஸ்அப் க்ரூப்களில் புதிய அம்சம் சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த அம்சம் க்ரூப் வீடியோ கால் என்றும் இந்த அம்சம் சோதனை செய்யப்படுவதாகவும், விரைவில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப் பீட்டா மூலம் புதிய அம்சங்களை சோதனை செய்து முன்கூட்டியே தகவல்களை வழங்கி வரும் WABetaInfo புதிய அம்சம் சார்ந்த விவரங்களை வெளியிட்டிருக்கிறது.

அதன்படி வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ கால் செய்யும் வசதி விரைவில் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த அம்சம் மூலம் ஒரே சமயத்தில் பலருக்கும் வீடியோ கால் மேற்கொள்ள முடியும்.

பேஸ்புக் மெசன்ஜரில் வழங்கப்பட்டு இருக்கும் வீடியோ கால் அம்சம் போன்றே வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ கால் அம்சமும் வேலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ கால் அம்சம் முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு மட்டும் வழங்கப்பட்டு அதன் பின் ஐ.ஓ.எஸ். இயங்குதள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படலாம் என WABetaInfo வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.