வாட்ஸ்அப் செயலியில் உள்ளதைப் போன்று பேஸ்புக் மெசஞ்சரில் அறிமுகமான அம்சம்

பேஸ்புக் மெசஞ்சர் செயலியில் பயனர் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்கும் வசதி வழங்கப்படுகிறது.

மெசஞ்சரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த அம்சம் முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டது.

வாட்ஸ்அப் போன்றே மெசஞ்சர் செயலியிலும் குறுந்தகவல்களை தனிநபர் மற்றும் க்ரூப் சாட்களில் அழிக்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

மெசஞ்சரில் அழிக்க வேண்டிய குறுந்தகவலை க்ளிக் செய்து “Remove for Everyone” ஆப்ஷனை க்ளிக் செய்தால் போதுமானது.

இவ்வாறு செய்த பின் அழிக்கப்பட்ட குறுந்தகவல் இருந்த இடத்தில் குறுந்தகவல் அழிக்கப்பட்டதை உணர்த்தும் தகவல் இடம்பெறுகிறது.

பேஸ்புக் இந்த அம்சத்தை முதற்கட்டமாக எழுத்துக்கள், க்ரூப் சாட்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், லி்ண்க் உள்ளிட்டவற்றை அனுப்பிய 10 நிமிடங்களில் அழிக்க முடியும்.

இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களுக்கான மெசஞ்சர் செயலியில் வழங்கப்படுகிறது.