வானில் பறந்து கின்னஸ் சாதனை படைத்த இரும்பு மனிதர்!

பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த Richard Browning உலகின் மிக வேகமான ஜெட் பெக் (Jet Pack) மூலம் வானில் பறந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இவர் இரும்பு மனிதர் என அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் கிராவிட்டி நிறுவனத்தின் நிறுவுனர் மற்றும் வாகனங்களை சோதனை செய்து பார்க்கும் மூத்த விமானியுமான Richard Browning இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

அவர் வடிவமைத்த ஆடையில் ஆறு எரிவாயு கலன்கள் இருப்பதாகவும், இவை ஒவ்வொன்றும் 22 கிலோ வரையிலான சக்தியை வெளிப்படுத்தி முன்னேறிச் செல்வதற்கு பெரிதும் உதவும் எனவும் தெரியவருகிறது.

அத்துடன் இது முழுவதும் மனிதனின் கட்டுப்பாட்டில் மட்டுமே செயல்படும். ரிமோர்ட் மூலம் கட்டுபடுத்த முடியாதாம்.

ஆனால் ரிச்சர்ட் தனது உடலின் மூலம் இதை கட்டுப்படுத்தி வானில் பறக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆடையானது, உலகின் மிக வேகமான ஜெட் பெக் என்ற சாதனையைப் பெற்றுள்ளது.

இதன் மூலம் மணிக்கு 51.53 கி.மீ. வேகத்தில் பறக்கலாம். அவர் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு பறந்து சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.