விக்னேஷ் சிவனின் அட்டகாசம்! கடுப்பான தயாரிப்பாளர்

நயன்தாரா தங்கியிருக்கும் ஹோட்டலிலே தனக்கு அறை தயார் செய்து தருமாறு விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

விக்னேஷ்சிவன் – நயன்தாரா காதலிப்பது ஊரறிந்த விஷயம். இருவரும் தற்போது சென்னையில் ஒரே வீட்டில் தங்கி இருக்கின்றனர்.

இந்நிலையில் ரஜினியின் தர்பார் படத்தின் ஷூட்டிங் இன்று மும்பையில் தொடங்கியுள்ளது.

இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நயன்தாரா, ஷூட்டிங்கில் பங்கேற்க மும்பை சென்றுள்ளார். அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் அவர் தங்கியுள்ளார்.

இதற்கிடையே விக்னேஷ் சிவன் நயன்தாரா தங்கியிருக்கும் அதே ஓட்டலில் அவர் தங்கியிருக்கும் அறை பக்கத்தில் தனக்கு அறை ஒதுக்கி தர வேண்டும் என தர்பார் பட தயாரிப்பாளரை கேட்டுள்ளாராம்.

இதனால் படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் மீது செம கடுப்பில் உள்ளாராம்.