விக்ரம் மகனுடன் ஜோடி சேருகிறாரா ஸ்ரீதேவியின் மகள்

வர்மா படப்பிடிப்பு முடிந்து வெளியாக தயாரான நிலையில், படம் கைவிடப்படுவதாக படக்குழு அறிவித்தது.

துருவ்வை கதாநாயகனாக வைத்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தி படத்தை வருகிற ஜூன் மாதத்தில் வர்மா படத்தை வெளியிட செய்யப்போவதாக படக்குழு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் ஏற்கனவே வர்மா படத்தில் மேகா சவுத்திரி கதாநாயகியாக நடித்து இருந்தார். அவரை மாற்ற படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அவருக்கு பதிலாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை கதாநாயகியாக நடிக்க வைக்க பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.