விசித்திரமாக பந்துவீசும் இலங்கை வீரர்!!

லசித் மலிங்காவைப் போல் விசித்திரமாக பந்துவீசும் முறையைக் கொண்ட மேலும் ஒரு பந்துவீச்சாளர் இலங்கை அணிக்கு கிடைத்துள்ளார்.

மலேசியாவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை போட்டியில் 18 வயதேயான கெவின் கொத்திஃகொடா ((Koththigoda)) என்ற இளம் சுழற்பந்து வீச்சாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரது வினோதமான பந்துவீசும் முறையால் பேட்ஸ்மேன்கள் மிகவும் குழப்பம் அடைகின்றனர் எனக் கூறப்படுகிறது.