விஜய், அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

தமிழ் சினிமாவில் இரு பெரும் நட்சத்திரங்களாக திகழும் நடிகர் அஜித் – விஜய்யின் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு அஜித், விஜய் நடித்த படங்கள் ஒரே நாளில் திரைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது விஜய்யின் 63 படத்தின் வேலைகள் நடைபெற்றுவருகின்றன. அதேபோல் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் 64 படமும், அஜித்தின் – 60 படமும் வரும் 2020 ஆம் ஆண்டின் கோடை விடுமுறைக்கு வெளிவரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

மேலும் விஜய்யின் 64 வது படத்தை மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அடுத்து அஜித் நடிக்கும், 60 வது படத்தை எச். வினோத் இயக்கவுள்ளார்.

ஏற்கனவே நடிகர் அஜித்தின் வீரம் , விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் கடந்த 2014 ஆம் ஆண்டில் பொங்கள் என்று ரிலீசானது குறிப்பிடத்தக்கது.