விஜய், ரஜினி வரிசையில் இடம்பிடித்த சூர்யா!

விஜய், ரஜினி வரிசையில் நடிகர் சூர்யாவின் என்.ஜி.கே படத்திற்கும் டுவிட்டர் நிறுவனம் கௌரவம் செலுத்தியுள்ளது.

அதற்கமைய சூர்யாவின் என்.ஜி.கே படத்திற்கு டுவிட்டர் நிறுவனம் சிறப்பு எமோஜி அளித்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள என்.ஜி.கே படம் எதிர்வரும் 31 ஆம் திகதி வெளியாகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், படத்தை கொண்டாட சூர்யா ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்த கொண்டாட்டத்தை அதிகரிக்கும் வகையில் சூர்யாவின் என்.ஜி.கே. படத்திற்கு எமோஜி அளித்துள்ளது டுவிட்டர் நிறுவனம்.

அதோடு, எமோஜி கொடுத்த டுவிட்டர் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து சூர்யா டுவீட் செய்துள்ளார்.

#NGKFire, #NGKFromMay31, #NGKTwitterEmoji ஆகிய ஹேஷ்டேக்களை சூர்யா ரசிகர்கள் டுவிட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இதற்கு முன்னர் விஜய்யின் மெர்சல் படத்திற்கும் ரஜினியின் காலா படத்திற்கு டுவிட்டர் எமோஜி வழங்கியது குறிப்பிடத்தக்கது.