விஜய் 63 துரிதகதியில் ஆரம்பம்: படக்குழு எங்கே சென்றுள்ளது தெரியுமா? (படம்)

சர்காரைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்க உள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு சிறு பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் வேலைகளில் படப்பிடிப்பிற்கான லொக்கேஷன் பார்க்கும் வேலைகள் தற்போது தீவிரமாக இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக இயக்குனர் அட்லீ, ஒளிப்பதிவாளர் GKவிஷ்ணுவுடன் அர்ச்சனா கல்பாத்தி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து அவர்கள் எடுத்த புகைப்படத்தை அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

From Kollywood to Hollywood #Thalpathy63 @atlee47 @gkvishnu with my #colorKanadi 😎😎

A post shared by Archana Kalpathi (@archanakalpathi) on