விடுதலையாகும் ஞானசார தேரர்! ஹோமாகம நீதிமன்றத்தின் திடீர் உத்தரவு!

பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டிருந்த 6 மாத கால சிறைத் தண்டனை 5 வருடங்களுக்கு பிற்போட்டபட்டுள்ளது.

காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, கடந்த வருடம் ஜூன் மாதம் 19ஆம் திகதி கலகொட அத்தே ஞானசார தேரர், ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டை தாக்கல் செய்திருந்தார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டின் வழக்கு விசாரணை இன்று மாலை ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கில் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன் போதே குறித்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.