விபத்தில் சிக்கிய சின்னத்திரை பிரபலத்தின் தற்போதைய நிலை என்ன?

ஹிந்தி தொலைக்காட்சியில் The Kapil Sharma Show என்ற நிகழ்ச்சி மூலம் பிரபல்யமானவர் அலி அஸ்கர்.

இந்த ஷோவில் வயதான பாட்டி வேடம் போட்டு நடித்த அலி அஸ்கர் நேற்று காலை பயங்கர விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார்.

கார் முழுவதும் நொறுங்கும் அளவிற்கு விபத்து ஆக அலி எந்த ஒரு காயமும் இல்லாமல் தப்பியுள்ளாராம்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்;

நான் தான் காரை ஓட்டிச் சென்றேன். சிக்னலில் நின்று கொண்டிருக்கும் போது பெரிய சத்தம் கேட்டது.

அப்போது தான் எனக்கு தெரிந்தது என்னுடைய கார் முன்பு இருந்த லாரி மீது மோதியிருக்கிறது என்று, கார் முழுவதும் நொறுங்கிவிட்டது.

நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன் என்று கூறியுள்ளார்.