விபத்தில் தந்தை, மகன் பலி; தாய் கவலைக்கிடம் (படம்)

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்தனர்.

கட்டுப்பாட்டை இழந்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இந்த சம்பவம் நேற்று (15) இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் படுங்காயமடைந்த தாய் பதுளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 38 வயதுடைய தந்தையும், 4 வயதுடைய மகனும் உயிரிழந்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.