விமான நிலையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய 200 நச்சுத் தவளைகள்!

விமான நிலையம் ஒன்றில் நச்சுத்தன்மை மிக்க 216 தவளைகள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொலம்பியா தலைநகர் பொகோட்டாவிலுள்ள விமான நிலையத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிளிரும் சிவப்பு, மஞ்சள் நிறத்தில் காணப்படும் தவளைகள் திரைப்படச்சுருள்களை வைக்கும் பெட்டிகளில் கண்டுபிடிக்கப்பட்டன.

விமான நிலையத்தின் கழிப்பறையில் பை ஒன்றில் அந்த பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

தவளைகளைக் கடத்தல்காரர்கள் ஜெர்மனிக்குக் கடத்திச் செல்லவிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கறுப்புச் சந்தையில், இந்த தவளைகள் ஒவ்வொன்றும் 2000 டொலர் வரை விலைபோகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.