விரைவில் வயர்லெஸ் டிவி!

சாம்சங் நிறுவனம் சக்திவாய்ந்த வயர்லெஸ் பவர் டிரான்சீவர் எனும் சாதனத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு சாம்சங் சார்பில் சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் வயர்லெஸ் பவர் டிரான்சீவர் மற்றும் டிஸ்ப்ளே சாதனத்திற்கான காப்புரிமைக்கு விண்ணப்பிக்கப்பட்டது.

இந்த காப்புரிமா பெப்ரவரி 28, 2019 ஆம் திகதி பதிவிடப்பட்டது. இதில் புதிய சாதனம் சாம்சங் டி.வி. வயர்லெஸ்-ஐ சக்தியூட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இது வைடு காயில் மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

அண்மைக் காலமாக தொலைக்காட்சிகள் மிகவும் மெல்லியதாக உருவாக்கப்படும் நிலையில், வைடு காயில் பொருத்தப்படாது எனக் கூறப்படுகதிறது.

சாம்சங் பதிவு செய்திருக்கும் காப்புரிமையில் புதிய டி.வி.யில் வயர்லெஸ் பவர் டிரான்சீவர் செவ்வக வடிவில் இடம்பெற்றிருக்கும் என தெரியவந்துள்ளது.

பவர் டிரான்சீவர் காந்த சக்தி மூலம் வயர்லெஸ் முறையில் மின்சக்தியை பரிமாற்றம் செய்யலாம் எனத் தெரிகிறது.

மேலும் இதன் ஸ்பீக்கர்கள் டிரான்சீவர்களின் இருபுறங்களில் பொருத்தப்பட்டுள்ளது.

வயர்லெஸ் பவர் ரிசீவர் தனி பெட்டியுடன இணைக்கப்படுகிறது. பவர் ரிசீவரில் காந்த புலம் உருவாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பெட்டி சவுண்ட்பார் வடிவில் உள்ளது எனக் கூறப்படும் அதேவேளை இதனை தொலைக்காட்சியில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் வைத்துக் கொள்ளலாம்.