விரைவுத் தபாலில் அனுப்பப்பட்ட பூனை: மாட்டிக்கொண்ட நபர் கூறிய காரணம்?

விரைவுத் தபாலில் பூனை ஒன்றை அனுப்பி வைத்தவருக்கு தைவானில் பெருந்தொகை ஒன்று அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,

அட்டைப்பெட்டி ஒன்றில் பூனையை வைத்து பான்சியாவ் மாவட்டத்திலுள்ள உள்ளூர் விலங்கு மையத்திற்கு யாங் (33 வயது)அனுப்பியுள்ளார்.

தைவான் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக அவருக்கு 60 ஆயிரம் நியூ தைவான் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பூனைக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்படவில்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விலங்குகளின் நோய் தொற்றுகளுக்கான தடுப்பு மற்றும் கட்டுப்பாடுகளை மீறியதாக மேலும் 30 ஆயிரம் நியூ தைவான் டொலர் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தபால் விநியோக சேவை மற்றும் காவல்துறை கண்காணிப்பு காணொளியை வைத்து பூனை அனுப்பியவரை நியூ தைவான் நகர விலங்கு பாதுகாப்பு மற்றும் சுகாதார ஆய்வு அலுவலகம் அடையாளம் கண்டுகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து பூனையை அனுப்பியவர் கூறுகையில்;

பூனையை தன்னால் கவனிக்க முடியவில்லை என்றும், முன்பு காலில் ஏற்பட்ட காயத்தால் இந்த பூனையால் சரியாக நடக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் பூனைக்கு அக்குபஞ்சர் மற்றும் பாரம்பரிய மூலிகை சிகிச்சை போன்றவற்றை கொடுத்த பின்னரும் சரியாகவில்லை எனக் கூறினார்.

இதேவேளை தங்களின் செல்லப்பிராணிகளை பராமரிக்க முடியவில்லை என்றால் அதற்கு உரிய முறைகளை மக்கள் கையாள வேண்டுமென விலங்குகள் நிறுவனத்தின் இயக்குநர் சென் யுயான்-ச்சுன் கூறியுள்ளார்.

மேலும் போதிய காற்றோட்ட வசதி இல்லாத மற்றும் சுத்தமான நீர் செலுத்த வசதியில்லாத கொள்கலனில் ஒரு விலங்கு மூச்சுத்திணறி இறந்துவிடலாம் என்றும் தெரிவித்தார்.