விற்பனைக்கு வருகிறது மோட்டோ X4

லெனோவோவின் மோட்டோ X4 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட உள்ளது.

நவம்பர் 13 ஆம் திகதி வெளியிடப்பட இருக்கும் மோட்டோ X4 ஸ்மார்ட்போனிற்கென பிளிப்கார்ட் தளத்தில் பிரத்தியேக பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் மோட்டோ X4 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு அறிமுக சலுகைகள் வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மோட்டோ X4 சிறப்பம்சங்கள்:

– 5.2 இன்ச் ஃபுல் எச்டி LTPS IPS டிஸ்ப்ளே
– 2.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 ஆக்டாகோர் சி்ப்செட்
– 3 ஜிபி ரேம்
– 12 எம்பி + 8 எம்பி பிரைமரி கேமரா
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– 3000 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
– ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்
– வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
– கைரேகை ஸ்கேனர்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

சூப்பர் பிளாக் மற்றும் ஸ்டெர்லிங் புளூ நிறங்களில் கிடைக்கும் மோட்டோ X4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.23,999 விலையில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.