விஸ்வாசம் படத்தின் முக்கிய அப்டேட் இதோ!-

அஜித் குமார் – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

சிவா இயக்கத்தில் இந்தப் படத்தில் தற்போது அஜித் டப்பிங் பணிகளை ஆரம்பித்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக விஸ்வாசம் படத்தின் தமிழக திரையரங்கு உரிமை ரூ.48 கோடிக்கு விலை போனது. கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டப்பாடி ராஜேஷ் இந்த படத்தை கைப்பற்றியிருக்கிறார்.

டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ‘விஸ்வாசம்’ ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.