விஸ்வாசம் படத்துக்கு காசு தராத தந்தையை பெற்றோல் ஊற்றி எரித்த மகன்!

நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட மற்றும் நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர் விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராததால் தந்தையை மகன் எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாண்டியன் என்பவரிடம் அவரது மகன் அஜித்குமார் விஸ்வாசம் படம் பார்க்க பணம் வேண்டும் எனக் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு தந்தை மறுத்துள்ளார். தந்தையின் மறுப்பால் கோபம் கொண்ட மகன் தூங்கிக் கொண்டிருந்த போது பெற்றோல் ஊற்றி எரித்ததில் படுகாயம் அடைந்த பாண்டியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.