வீடுபுகுந்து சரமாரி அரிவாள் வெட்டு: பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்

சொத்து தகராறு காரணமாக தந்தையின் 2வது மனைவி மற்றும் மகனை, வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய முதல் மனைவியின் மகனை பொலிசார் சிறைபிடித்துள்ளனர்.

இந்த கோரச் சம்பவம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து தெரியவருகையில்;

அம்மச்சி ஊரணியை சேர்ந்த சுப்புராமன் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

இவரது 2வது மனைவி பழனிமுத்து மற்றும் அவரது மகன் மனோஜ் ஆகியோர், நேற்றிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது சுப்புராமனின் முதல் மனைவியின் மகனான பாலசுந்தரம் என்பவர், அதிகாலை 5 மணி அளவில் வீடு புகுந்து, தூங்கிக் கொண்டிருந்த பழனிமுத்து மற்றும் மனோஜை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் இருவருக்கும் உடலில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டமையைத் தொடர்ந்து பாலசுந்தரத்தை பிடித்து விசாரணை தேவகோட்டை பொலிசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சொத்து தகராறு காரணமாக கொலை முயற்சி நடந்ததாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.