வீட்டிலேயே பெடிக்கியூர் செய்வது எப்படி?

இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பாக பாதங்களை நன்றாக அழுத்தி சுத்தம் செய்துவிட்டு படுக்கச் செல்வது எப்போதும் நல்லது.

காலுக்கு செய்யப்படும் பெடிக்கியூரை  வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு நாமே செய்யலாம்.

வீட்டில் பெடிக்கியூர் செய்யும் முறை…

பாதம் நனையும் அளவுக்கு ஒரு வட்ட வடிவ பவுலில் வெதுவெதுப்பான நீர்,  கல் உப்பு, லெமன், ரோஸ் வாட்டர் சிறிது, ரோஸ் பெடல்ஸ் இணைத்து 10 நிமிடங்கள் பாதங்களை ஊற வைத்தல் வேண்டும்.

சிலவகை நெயில் கட்டரில் கூடுதல் இணைப்பாக கியூட்டிக்கல் புஷ்ஷர் மற்றும் நெயில் கிளீனர் இணைக்கப்பட்டிருக்கும். அதைக் கொண்டு நகங்களின் ஓரங்களை சுத்தம் செய்யலாம்.

முதல் நாள் ப்ரீஸ் செய்த தேங்காய் எண்ணெயை கிட்டிக்கல் கிரீமாக நகங்களில் தடவி புஷ்ஷர் கொண்டு தேவையற்ற தோல்களை நீக்கவும்.

பீர்க்கங்காய் நாரில் ஷாம்புவை சேர்த்து, கால்களில் அழுத்தி தேய்க்கும்போது அழுக்கு முழுவதும் நீங்கும். பியூமிக் ஸ்டோன் கொண்டு காலை நன்றாக தேய்க்க வேண்டும்.

நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை கால்களில் தடவி சர்க்கிள் மற்றும் ஆன்டி சர்க்கிள் வடிவில் முட்டி முதல் பாதம் வரை நன்றாக மசாஜ் செய்யுங்கள்