வீணாகிய திசரவின் போராட்டம்! மீண்டும் தோற்ற இலங்கை அணி

நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.

இலங்கை அணி 21 ஓட்டங்களால் போராடி தோல்வியடைந்துள்ளது.

இந்த தோல்வியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்ககை அணி, 2-0 என நியூசிலாந்து அணியிடம் இழந்துள்ளது.

மவுண்ட் மௌனன்குய் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ரோஸ் டெய்லர் 90 ஓட்டங்களையும், கொலின் மன்ரோ 87 ஓட்டங்களையும், ஜேம்ஸ் நீஸம் 64 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் லசித் மாலிங்க 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைதொடர்ந்து 320 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி, 46.2 ஓவர்களுக்கு சுருண்டது. இதனால் இலங்கை அணி 21 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக திசர பெரேரா 140 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் இஷ் சொதி 3 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் நீஸம் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இதன்போது நியூசிலாந்து அணிக்கு இறுதி வரை பயத்தை காட்டிய திசர பெரோ, தனது ஒருநாள் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தார்.

அதேபோல நியூசிலாந்து அணிக்கெதிராக இலங்கை அணி வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகபட்ச ஓட்டங்கள் பட்டியலில் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவுடன் இணைந்தார். மேலும் ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசிய முதல் இலங்கை வீரர் என்ற பெருமையையும், உலகளவில் ஆறாவது வீரர் என்ற பெருமையை தன்வசப்படுத்தினார்.

இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, நாளை மறுதினம் நெல்சன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.