வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கி புகைப்படத்தை எடுத்து அனுப்பிய இன்சைட் விண்கலம்!-

செவ்வாய் கிரகத்திற்கு இன்சைட் விண்கலத்தினை அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் அனுப்பி இருந்தமை அறிந்ததே.

இந்த நிலையில் குறித்த இன்சைட் விண்கலமானது செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதாகவும், தரையிறங்கியதும் முதல் புகைப்படத்தையும் எடுத்து அனுப்பியுள்ளதாகவும் நாசா அறிவிப்புடன் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளது.

பூமியில் இருந்து 146 மில்லியன் கிமீ தூரத்தில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு சமீபத்தில் நாசா இன்சைட் என்ற விண்கலத்தை அனுப்பியது.

குறித்த இன்சைட் விண்கலமானது நேற்று (26) செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் இன்று (27) அதிகாலையில் தரையிறங்கியது.

தரையிறங்கிய அடுத்த நிமிடம் இன்சைட் புகைப்படம் அனுப்பியதாகவும், இந்த புகைப்படம் நாசாவை வந்தடைய 8 நிமிடங்கள் எடுத்துக் கொண்டதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து நாசா விஞ்ஞானிகள் உற்சாகத்தில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.