வெற்றியைச் சுவைத்த தென்னாபிரிக்கா

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்களால் வெற்றிக் கனியை எட்டிப்பிடித்துள்ளது.

போட்எலிசபத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 39.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பாக இசுறு உதான 78 ஓட்டங்களையும், அவிஷ்க 29 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அன்ரிச் நொர்டே 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதன் பின்னர் 190 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 32.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்னாபிரிக்கா அணி 4-0 என கைப்பற்றியுள்ளது.

5 வதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி கேப் டவுன் மைதானத்தின் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.